நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல்
  
Translated

கொல்லிகள் எதிர்ப்பு — ஒரு கொல்லி செயல்படுவதைத் தடுப்பது.


நிர்ணயப்படி மருந்து — மருத்தவர் ஒரு நோய்க்கு எந்த மருந்தைச் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்தல்.

 

“மருந்துகளுக்கு எதிராக செயல்படுவதற்குத் தன்னைப் பக்குவப்படுத்துவதற்கும் மாற்றியமைப்பதற்கும் நுண்ணுயிரிகள் திறன் கொண்டவை. ஆகையால், நுண்ணுயிரிகளைத் தடுத்துக் கொல்ல வேண்டிய மருந்துகள், பயனற்றதாகிவிடுகின்றன.”

 

“கொல்லிகளை அளவுக்கு அதிகமாகவும் தவறான முறையிலும் பயன்படுத்தினால் நுண்ணுயிர் எதிர்ப்புக்கு வழிவகுக்கும்."

 

“நிர்ணயப்படி மருந்தைச் சரியான முறையில் பயன்படுத்தினாலும் நுண்ணுயிர் எதிர்ப்பு ஏற்படுகிறது. இருப்பினும், கொல்லிகளைத் தேவையற்ற முறையிலும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தினால் நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் பொதுவாகவே பெருகிவிடுகின்றன.”

 

“இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வாழும் குடிமக்கள் கொல்லிகள் எதிர்ப்பினால் குறைந்தது 50,000க்கும் மேலானோர் நுண்ணுயிர்ப்பிணிகளுக்குத் தங்கள் உயிரை ஒவ்வொரு ஆண்டும் இழக்கின்றனர்.”

 

Learning point

கொல்லிகள் எதிர்ப்பை ஏற்படுத்துவது எது?

 

சில கொல்லிகள் எதிர்ப்பு இயற்கையாகவே நிகழ்கின்றது. ஏனென்றால், பென்சிலின் போன்ற கொல்லிகள் மண்ணில் இயற்கையாகக் காணப்படுகின்ற பூஞ்சை அல்லது பிற நுண்ணுயிர்களிலிருந்து வந்தவை. காலப்போக்கில் தழுவி உயிர்வாழ நுண்ணுயிர்கள் தங்களை மாற்றியமைத்து கொல்லிகளை எதிர்க்கும் திறனைப் பெறுகின்றன. பொதுவாக சுற்றுச்சூழலில் கொல்லிகள் மிகக் குறைவு. 1930ஆம் ஆண்டுக்கு முன்பு (பென்சிலினின் கண்டுபிடிக்கும் முன்) கொல்லிகள் எதிர்ப்பாற்றல் கொண்ட நுண்ணுயிர்களால் வரும் நோய்களைக் காண்பது அரிதாக இருந்தது.

 

கொல்லிகளை அளவுக்கு அதிகமாகவும் தவறான முறையிலும் பயன்படுத்துவதால் கொல்லிகள் எதிர்ப்பாற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. கொல்லிகள் எதிர்ப்பாற்றல் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 முதல் 250,000 டன் எதிர்நுண்கிருமிகள் தயாரிக்கப்பட்டு நுகரப்படுகின்றன.[1,2] எதிர்நுண்கிருமிகளிகள் சுமார் 70 சதவீதம் விலங்குகளாலும் 30 சதவீதம் மனிதரிகளாலும் நுகரப்படுகின்றன. 

 

மனிதர்கள் மற்றும் விலங்குகள் இருவரும் உட்கொள்ளும் பெரும்பாலான எதிர்நுண்கிருமிகள் சிறுநீர், மலம் ஆகியவற்றில் வெளியேற்றப்பட்டு கழிவுநீரில் சேருகின்றன. இது சுற்றுச்சூழலை மாசு அடைய செய்கின்றன. கொல்லிகள் வெளிப்படும் போது, மனிதர்கள் மற்றும் விலங்குகளில் வாழும் நுண்ணுயிர்கள் எதிர்க்கும் திறனைப் பெறலாம். இந்த நுண்ணுயிர்கள் சுற்றுச்சூழலில் பரவி மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடும்.[2, 3]

 

உண்மையில் நுண்ணுயிர்ப்பிணி உள்ளவர்களுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிக்க கொல்லிகள் வேண்டும். எனினும், நுண்ணுயிர்ப்பிணி இல்லாதவர்கள் கொல்லிகளை உட்கொள்ளக்கூடாது. பென்சிலினைக் கண்டுபிடித்த சர் அலெக்சாண்டர் பிளெமிங், ஆரம்பத்தில் இருந்தே கொல்லிகள் எதிர்ப்பின் சிக்கலைக் கணித்துக் கூறியுள்ளார், அவர், “பென்சிலின் சிகிச்சையுடன் விளையாடும் சிந்தனையற்ற நபர்கள், பென்சிலின் எதிர்ப்பு நுண்ணுயிர்ப்பிணியால் பாதிக்கப்பட்ட மனிதனின் மரணத்திற்குத் தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

இப்போதெல்லாம், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பொதுவான நுண்ணுயிரிலிருந்து வரும் நோய்களுக்குச் சிகிச்சையளிக்க பென்சிலின் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான நோய்க்கிருமிகள் ஏற்கனவே பென்சிலினை எதிர்க்கும் திறன் கொண்டவையாகிவிட்டன.

 

தற்போது பென்சிலினுக்குப் பதிலாகப் பல்வேறு கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இவ்வுலகில் சுமார் 700,000 பேர் எதிர்ப்பாற்றல் கொண்ட நுண்கிகிருமிப்பிணிக்கு உயிர் இழக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2050ஆம் ஆண்டில் இந்த இறப்பு எண்ணிக்கை 10,000,000 உயரக்கூடும்.[1] பல ஆண்டுகளாக உண்மையான புதிய வகை கொல்லிகளை நாம் கண்டுபிடிக்கவில்லை என்பது உண்மை.

 

“இந்த மருந்து சிக்கல் குறித்து நம் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரம் தேவை. இதை ஓர் அவசர முன்னுரிமையாகப் பார்க்கிறேன்,” என்கிறார் லார்ட் ஜிம் ஓ நீல்.[1]

 

ஆதார நூற்பட்டியல்

[1]     ஒ'நெயில்., ஜே (19 மார்ச் 2016). உலகளவில் மருந்து-எதிர்ப்பினால் சிகிச்சைக்கு அடங்காத நோய்களைக் கையாளுதல்: இறுதி அறிக்கை மற்றும் பரிந்துரைகள். எதிர்கிருமிகள் எதிர்ப்பாற்றல் பற்றிய விமர்சனம். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

O'Neill, J. (19 மார்ச் 2016). Tackling Drug-Resistant Infections Globally: Final Report and Recommendations. The Review on Antimicrobial Resistance. https://amr-review.org/sites/default/files/160525_Final paper_with cover.pdf

[2]     சர்மா, ஏ. கே. மேயர், எம். டி. பாக்ஸால், ஏ. பி. (2006). சுற்றுச்சூழலில் கால்நடை நுண்ணுயிர் கொல்லிகளின் பயன்பாடு, விற்பனை, வெளிப்பாடு பாதைகள், நிகழ்வு, விதி மற்றும் விளைவுகள் பற்றிய உலகளாவிய பார்வை. கிமோஸ்பிர், 65 (5), 725-759.

Sarmah, A. K., Meyer, M. T., & Boxall, A. B. (2006). A global perspective on the use, sales, exposure pathways, occurrence, fate and effects of veterinary antibiotics (VAs) in the environment. Chemosphere,65(5), 725-759.

doi:10.1016/j.chemosphere.2006.03.026

[3]    போய்கெல், டி. பி. ப்ரோவர், சி. கில்பர்ட், எம். கிரென்ஃபெல், பி. டி. லெவின், எஸ். ஏ. ராபின்சன், டி. பி. லக்ஷ்மிநாராயண், ஆர். (2015). உணவு விலங்குகளில் ஆண்டிமைக்ரோபியல் பயன்பாட்டின் உலகளாவிய போக்குகள். தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள், 112 (18), 5649-5654.

Boeckel, T. P., Brower, C., Gilbert, M., Grenfell, B. T., Levin, S. A., Robinson, T. P., . . . Laxminarayan, R. (2015). Global trends in antimicrobial use in food animals. Proceedings of the National Academy of Sciences,112(18), 5649-5654. doi:10.1073/pnas.1503141112

 

Related words.
Word of the month
New word